/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெடுஞ்சாலை துறையிடம் சாலையை ஒப்படைக்க வேண்டி மக்கள் மனு
/
நெடுஞ்சாலை துறையிடம் சாலையை ஒப்படைக்க வேண்டி மக்கள் மனு
நெடுஞ்சாலை துறையிடம் சாலையை ஒப்படைக்க வேண்டி மக்கள் மனு
நெடுஞ்சாலை துறையிடம் சாலையை ஒப்படைக்க வேண்டி மக்கள் மனு
ADDED : டிச 31, 2024 07:38 AM
ஏற்காடு: ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, கரடியூர், கொளகூர் போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரில் வந்து, பி.டி.ஓ., விடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: புத்துார் பிரிவு சாலை முதல், கரடியூர், கொளகூர், சொரக்காப்பட்டி வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இச்சாலை வழியாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவியர் பள்ளி செல்லவும் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் சிரமமாக உள்ளது. இந்த சாலை ஏற்காட்டிற்கு செல்லும், மூன்றாவது பிரதான சாலையாக உள்ளதால், உள்ளூர், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த சிரமப்படுகின்றனர்.
மேலும் இந்த சாலை புத்துார் பிரிவு சாலை முதல், சொரக்காய்பட்டி வரை ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கும், சொரக்காய்பட்டி முதல் கண்ணப்பாடி வரை, 3 கிலோ மீட்டர் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கும் உட்பட்ட சாலையாகவும், கண்ணப்பாடி முதல் கணவாய் புதுார் வரை உள்ள 5 கிலோ மீட்டர் சாலை வனத்துறையிடம் உள்ளது. எனவே, இச்சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து சாலை விரிவாக்கம் செய்து, நெடுஞ்சாலையாக மாற்றினால் கிராம மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.