/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நவப்பட்டி ஊராட்சியில் மக்கள் மறியல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
/
நவப்பட்டி ஊராட்சியில் மக்கள் மறியல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
நவப்பட்டி ஊராட்சியில் மக்கள் மறியல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
நவப்பட்டி ஊராட்சியில் மக்கள் மறியல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 21, 2025 06:13 AM
மேட்டூர்: கோவிலுக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மேட்டூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் காவேரி-கிராஸ் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
மேட்டூர் தாலுகா, கொளத்துார் ஒன்றியம், நவப்பட்டி ஊராட்சி, காவேரிகிராஸ், அண்ணாநகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்-ளது. பிப்.,10ல் கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. கோவிலுக்கு செல்லும், 14 அடி அகல சாலையை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், 2 அடி அகலம் இடைவெளி விட்டு இதர பகுதியை, 30 அடி நீளம் வரை ஆக்கிரமித்து கூரை அமைத்து விட்டனர்.சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று மதியம், 1:30 மணிய-ளவில் அண்ணாநகர் மக்கள் மேட்டூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், கொளத்துார்
ஒன்றிய ஆணையாளர் அண்ணாத்-துரை, பி.டி.ஓ., (கி.ஊ) செந்தில்குமார் ஆகியோர், மறியலில் ஈடு-பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு அனைவரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்கு சென்-றனர். அங்கு ஒரு தரப்பினர் நீதிமன்ற தடை ஆணையை காட்-டினர். அவர்களிடம் வருவாய்துறை, உள்ளாட்சித்துறை அலுவ-லர்கள் பேசினர். அதை தொடர்ந்து
வருவாய் ஊழியர்கள், ஆஸ்-பெட்டாஸ் கூரை மற்றும் இரும்பு கம்பங்களை அங்கிருந்து அகற்றி கோவிலுக்கு மக்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். பேராட்டத்தால் மேட்டூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் மதியம், 12:30 மணி
முதல், 1:30 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்பட்டது.
* ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அண்ணாநகரை சேர்ந்த பாலன் தலைமையில், 94 ஆண்கள், 25 பெண்கள் உள்பட, 120 பேர் சாலைமறியலில் ஈடு-பட்டதாக நவப்பட்டி வி.ஏ.ஓ., விஜய குமார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அவர்கள், 120 பேர்
போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.