ADDED : நவ 06, 2026 01:24 AM
சேலம்: கொண்டலாம்பட்டி அருகே பூலாவரியை சேர்ந்தவர் சக்திவேல், 47. சேலம் பெரியார் பல்கலையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிகிறார். இவருக்கு மனைவி ஜெயப்பிரியா, மகள், மகன் உள்ளனர்.
இவர்கள், பல்கலை வளாக குடியிருப்பில் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் வேலை விஷயமாக சென்னை செல்வதாக கூறி, சக்திவேல் புறப்பட்டார். பின் அவரது மொபைல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் இல்லாததால், ஜெயப்பிரியா நேற்று அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
விமான நிலையம் சார்பில்
பள்ளியில் மரக்கன்று நடல்
ஓமலுார், நவ. 6
விமான நிலையங்களில் துாய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இரு வார விழா(ஸ்வச்சதா பக்வாடா) திட்டம், கடந்த, 1 முதல், வரும், 15 வரை நடக்கிறது. அதை ஒட்டி சேலம் விமான நிலையம் சார்பில் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
நிலைய இயக்குனர் நவ்ஷாத் தலைமை வகித்தார். பல்வேறு பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டனர். மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து, இனிப்பு வழங்கினர்.
