/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
/
அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ADDED : ஆக 25, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை, போலீசார் தேடுகின்றனர்.
சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் திருத்தணி செல்வம், 53. இவர், தன் வீட்டருகே நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, வீட்டுக்குள் வீசியபோது, பைக் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. புகாரில், அன்னதானப்பட்டி போலீசார், மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.