/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடகு கடை ஓனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
/
அடகு கடை ஓனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ADDED : ஆக 25, 2025 03:39 AM
சேலம்:சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன் தெருவை சேர்ந்தவர் திருத்தணி செல்வம், 53; வீட்டருகே நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர் எழுந்து வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் ஓடியுள்ளார்.
பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, வீட்டுக்குள் வீசியபோது பைக் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. கடை ஷட்டர் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவரது புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமராவை பார்த்ததில், பெட்ரோல் குண்டை ஒருவர் வீசிய காட்சி கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.