/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிசியோதெரபி மாணவி தற்கொலை காதலித்த மாணவருடன் தகராறு?
/
பிசியோதெரபி மாணவி தற்கொலை காதலித்த மாணவருடன் தகராறு?
பிசியோதெரபி மாணவி தற்கொலை காதலித்த மாணவருடன் தகராறு?
பிசியோதெரபி மாணவி தற்கொலை காதலித்த மாணவருடன் தகராறு?
ADDED : ஜூலை 13, 2025 01:31 AM
சேலம், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையம், கணக்கன்காட்டை சேர்ந்த, அம்பிகாபதி மகள் ரோஹிணி, 19. சேலம், தனியார் கல்லுாரியில், பிசியோதெரபி, 2ம் ஆண்டு படித்து வந்த அவர், அதே பகுதியில் வீடு எடுத்து தனியே தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த, 10ல் விஷம் குடித்ததால், தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மாணவி படித்த கல்லுாரியில், ஒரு மாணவரை காதலித்துள்ளார். அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர் திட்டியுள்ளார். இதில் மாணவி, கடந்த வாரம் சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல் நலம் பெற்றார்.
ஆனால், மீண்டும் கடந்த, 10 காலை, காதலன் குடியிருப்புக்கு சென்று, 'எபாக்ஸி ரெசின்' எனும் விஷத்தை அருந்தியுள்ளார். அருகில் உள்ளவர்கள் மீட்டு, மீண்டும் மருத்துவ
மனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.