/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடல்
/
12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடல்
12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடல்
12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடல்
ADDED : நவ 25, 2024 02:56 AM
சங்ககிரி: சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பு இணைந்து, சங்ககிரி தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகள், சாலை-யோர பகுதி என, 30,000க்கம் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர்.
தற்போது சங்ககிரியில் முதல்முறை, குப்பனுார் தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டிய மாதேஸ்வரன் கோவில் வளாகத்தில், 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்-தது. சங்க துணைத்தலைவர் சின்னதம்பி, அமைப்பின் நிறுவனர் பழனிசாமி தலைமை வகித்தனர்.தொடர்ந்து மேஷத்துக்கு செம்ம-ரக்கன்று, ரிஷபத்துக்கு ஏழிலைப்பாலை, மிதுனத்துக்கு பலா, கட-கத்துக்கு முருங்கை, சிம்மத்துக்கு பாதிரி, கன்னிக்கு மா, துலாத்-துக்கு மகிழம், விருச்சிகத்துக்கு கருங்காலி, தனுசுக்கு அரசு, மக-ரத்துக்கு தோதகத்தி, கும்பத்துக்கு பரம்பை, மீனத்துக்கு ஆலன் என அந்தந்த ராசிகளுக்குரிய மரக்கன்றுகளை நட்டனர்.அதேபோல், 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளை நட்டனர். இதில் கோவில் நிர்வாகிகள், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் பிரகாஷ், சின்னுசாமி, பசுமை சங்ககிரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.