ADDED : அக் 24, 2026 03:58 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் வேம்படி தாளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 75. பிரபல பின்னணி பாடகரான இவர், 1989ல், தமிழ் திரையுலகில் அறிமுக-மானார். 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி-யுள்ளார். 'காதல் கோட்டை' படத்தில், 'வெள்ள-ரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' உள்ளிட்ட பாடல்கள், பெரும் வரவேற்பை பெற்றன. 'பொற்காலம்' படத்தில் வரும், 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலுக்கு, தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருது, கலை
மாமணி விருது பெற்றார்.
பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் உடல் அடக்கம்உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான வேம்படிதாளத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை, அலங்க-ரிக்கப்பட்ட தேரில் உடல் வைக்கப்பட்டு, அருகே உள்ள பொது மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்-துச்செல்லப்பட்டது. அவரது அண்ணன் மகன் பாலச்சந்தர், கிருஷ்-ணராஜ் பாடிய பாடல்களை பாடியபடி சென்றார். மூத்த மகள் ஜீவரேகா, அமெரிக்காவில் இருந்-ததால், வாட்ஸாப் வீடியோ கால் மூலம், இறுதி ஊர்வலத்தை பார்த்து கண்ணீர் விட்டார். இளைய மகள் பிரியா, இறுதி காரியம் செய்த பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
