/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை தொடக்கம்
/
அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை தொடக்கம்
ADDED : மே 23, 2025 01:28 AM
இடைப்பாடி, தமிழகத்தில் கடந்த, 16ல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது.
இதில் தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்து மாணவர்களுக்கும் கடந்த, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அன்று முதலே, பிளஸ் 1 சேர்க்கை நடத்த வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ஆனால் இடைப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், சான்றிதழ் வழங்காததோடு, பிளஸ் 1 சேர்க்கையும் தொடங்காமல் மெத்தனம் காட்டினர். இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, பிளஸ் 1 சேர்க்கை நடந்தது. முதல் நாளில், 23 மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று, 6 மாணவர்கள் சேர்ந்தனர். மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் சேர்க்கை தொடங்கும் என, கல்வி துறையினர் தெரிவித்தனர்.