/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ம.க.,- எம்.எல்.ஏ.,
/
மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ம.க.,- எம்.எல்.ஏ.,
மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ம.க.,- எம்.எல்.ஏ.,
மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ம.க.,- எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 24, 2025 01:14 AM
சேலம், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், தனது தந்தை ஆசிரியர் ராமதாசின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, விநாயகம்பட்டி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சுவர் கடிகாரம் மற்றும் நாள்தோறும் காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி மற்றும் அன்றாட பணியில் வாழ்வின் லட்சியங்களை அடைய எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை
வழங்கினார்.
மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை, மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ம.க., மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிநாதன், செட்டிச்சாவடி முன்னாள் பஞ்., துணைத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ரங்கசாமி, ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பூபதி, நித்யா, தேன்மொழி, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.