/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதானி விவகாரத்தில் பொது நல வழக்கு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பேட்டி
/
அதானி விவகாரத்தில் பொது நல வழக்கு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பேட்டி
அதானி விவகாரத்தில் பொது நல வழக்கு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பேட்டி
அதானி விவகாரத்தில் பொது நல வழக்கு பா.ம.க., செய்தி தொடர்பாளர் பேட்டி
ADDED : நவ 30, 2024 02:41 AM
இடைப்பாடி: தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பா.ம.க., சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொட-ரப்படும்,'' என, அக்கட்சி செய்தி தொடர்பாளர் பாலு தெரி-வித்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட நிர்வாகிகளுடன், பா.ம.க., செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம், செய்தி தொடர்பாளர் பாலு தலைமையில், வெள்ளாண்-டிவலசில் நேற்று நடந்தது.
தொடர்ந்து பாலு கூறியதாவது: அமெரிக்க அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில், தமிழக மின் துறை பெயர் இடம்பெற்றது எப்-படி? இதுதொடர்பாக தமிழக அரசு எந்த பதிலும் அளிக்க-வில்லை. கடந்த ஜூலை, 16ல், அதானி குழுமம், தமிழக முதல்-வரை அவரது இல்லத்தில் சந்தித்ததாக செய்திகள் வெளியானது உண்மையா? இதை தமிழக அரசு ஏன் ரகசியமாக வைத்துள்ளது. சந்திப்பின் அவசியம் என்ன?
மின்சாரம் விற்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மின் வாரிய கடன், பல கோடி ரூபாய் உள்ள நிலையில், தனியார் சோலார் சிஷ்டம் வாங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இது அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பா.ம.க., சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில இளைஞரணி செயலர் செந்தில், தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலர் ரவி, நகர செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

