ADDED : டிச 14, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், டிச. 14--
சேலம் மாவட்டம் ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஓமலுார், காடையாம்பட்டி பகுதிகளில், பா.ம.க., ஆய்வு குழு கூட்டம் நேற்று நடந்தது. மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்தார்.
அதில் கட்சியின் உயர்மட்ட ஆய்வு குழுவை சேர்ந்த வக்கீல் பாலு, வேலுார் மாவட்ட அமைப்பு செயலர் கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலர் செந்தில் ஆகியோர், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளிடம் ஆலோசித்தனர். இதில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு உள்பட பலர்
பங்கேற்றனர்.