/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி
/
சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி
சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி
சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி
ADDED : ஜன 29, 2025 07:19 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட வணிக மேம்பாட்டு பிரிவு, சரக்கு ரயில் மூலம் வணிகத்தை பெருக்கவும், வருவாய் அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை புல் மிஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து, பொக்லைன் வாகனங்களை, சரக்கு ரயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்முறை, இருகூரில் இருந்து, 30 வேகன் ரேக்கில், 70 பொக்லைன் இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, ஹரியானா மாநிலம், பல்லாப்கார் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதன்மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, 37.11 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இதேபோல் மாதத்துக்கு இரு முறை, பொக்லைன் வாகனங்கள் அனுப்பப்பட உள்ளன.