/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாயமான சிறுமியை மீட்ட திருநங்கைகள் ஒடிசா தம்பதியிடம் போலீஸ் ஒப்படைப்பு

ADDED : ஜூலை 01, 2025 01:31 AM
சேலம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமிபாத் உத்ராஜ், இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு விஷ்ணு
பிரியா என்ற, 4, வயது பெண் குழந்தை உள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிரபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து, அங்குள்ள டெக்ஸ்டைல்சில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் அமிபாத் உத்ராஜ், மனைவி, குழந்தையுடன் சேலம் வந்தார்.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடையில், புதிய மொபைல் போன் வாங்க பார்த்து கொண்டிருந்த போது, சிறுமி விஷ்ணுபிரியா மாயமானார். அதிர்ச்சிடைந்த இருவரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், வழி தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுமியை, திருநங்கைகள் சிலர் மீட்டு, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிறுமியை கன்னங்குறிச்சி காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.
பின்னர், சிறுமியின் பெற்றோரை கன்னங்குறிச்சி காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, போலீசார் சிறுமியை தம்பதியிடம் ஒப்படைத்து, குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், தனியாக விட வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.