/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுச்சாவடி தயார்படுத்தும் பணி உதவி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
/
ஓட்டுச்சாவடி தயார்படுத்தும் பணி உதவி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
ஓட்டுச்சாவடி தயார்படுத்தும் பணி உதவி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
ஓட்டுச்சாவடி தயார்படுத்தும் பணி உதவி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
ADDED : ஏப் 17, 2024 12:45 PM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் தாலுகா அலுவலகத்தில், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் ஓமலுார் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி தலைமை வகித்து பேசியதாவது:
இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் சில ஓட்டுச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என, வாட்ஸாப்பில் தகவல் மட்டும் போடுகிறீர்கள். அதற்குரிய அதிகாரிகளை சந்தித்து அப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதிகாரிகள் ஒத்துழைக்காவிடில் கடிதம் கொடுத்தால் அதிகாரிகள் மீதும், தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்படும். பல இடங்களில், 'பூத் ஸ்லிப்' இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக, புகார் தெரிவிக்கின்றனர். அவற்றை விரைந்து வழங்க வேண்டும். மேற்கொண்டு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் ரவிக்குமார், தாசில்தார் வள்ளமுனியப்பன், காடையாம்பட்டி தாசில்தார் ஹசின்பானு, ஓமலுார் பி.டி.ஓ., வாசுதேவபிரபு, ஓமலுார் தேர்தல் துணை தாசில்தார் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

