/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கலால் களைகட்டிய சந்தை: ரூ.3.75 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
பொங்கலால் களைகட்டிய சந்தை: ரூ.3.75 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கலால் களைகட்டிய சந்தை: ரூ.3.75 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கலால் களைகட்டிய சந்தை: ரூ.3.75 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜன 14, 2024 11:26 AM
இடைப்பாடி; இடைப்பாடி தாலுகா, கொங்கணாபுரம் வாரச்சந்தை நேற்று கூடியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும், 17ல் கரிநாள் என்பதால், சந்தையில் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்க வந்தனர். அதற்கேற்ப, 5,200 ஆடுகள் கொண்டுவரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு, 6,600 முதல், 6,900 ரூபாய்; செம்மறியாடு, 6,500 முதல், 6,750 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 3.75 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
வீரகனுாரில் ரூ.3 கோடி
அதேபோல் தலைவாசல் அருகே வீரகனுாரில் கூடிய சந்தையில், 3,200க்கும் மேற்பட்ட ஆடுகள், 700க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டுவந்தனர். இதன்மூலம், 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தைவிட கூடுதல் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்' என்றனர்.