ADDED : நவ 10, 2026 04:58 AM
சேலம்; சத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில் இன்று இரவு, 8:20 மணிக்கு போத்தனுார் சந்திப்பில் புறப்பட்டு, வரும் 13, மதியம், 12:00 மணிக்கு பீகாரில் உள்ள ரக்சால் ஸ்டேஷனை அடைகிறது. இது, இரவு, 9:00 மணிக்கு திருப்பூர், 9:55 க்கு ஈரோடு, 11:00 மணிக்கு சேலம், மறுநாள் இரவு, 1:18 க்கு ஜோலார்பேட்டை ஸ்டேஷனில் நின்று செல்லும். மறு மார்க்க ரயில், வரும் 14, மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு, 17, காலை, 9:30 மணிக்கு போத்தனுாரை அடைகிறது.
இது 17, அதிகாலை, 3:28 மணிக்கு ஜோலார்பேட்டை, 5:15 மணிக்கு சேலம், 6:40 க்கு ஈரோடு, 7:40 க்கு திருப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்லும்.இது மேலும், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, பலங்கீர், சம்பல்பூர், ஜார்சுடா, ரூர்கேலா, ரன்சிபுரா, ரோர்கேலா நகரம், தன்பாத், மதுபூர், ப்ரவுனி, தர்பங்கா உள்ளிட்ட ஸ்டேஷன்களிலும் நின்று செல்லும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
