/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
15 மாதங்களுக்கு பின் மின்பாதை ஆய்வாளர் கைது
/
15 மாதங்களுக்கு பின் மின்பாதை ஆய்வாளர் கைது
ADDED : ஆக 31, 2025 07:41 AM
மேட்டூர்:மேட்டூர், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி ரெட்டியூரை சேர்ந்தவர் பெருமாள், 53. மின்பாதை ஆய்வாளர்(லைன் இன்ஸ்பெக்டர்). இவர், 2023ல், ஒரு லட்சம் ரூபாயை, நவப்பட்டி ஊராட்சி காவேரிகிராஸ் பகு-தியை சேர்ந்த காளியப்பனிடம், கடனாக வாங்கினார். சில மாதங்கள் கழித்து, காளியப்பன், அந்த பணத்தை கேட்டுள்ளார். அவர் தராமல் இழுத்தடித்துள்ளார்.
விரக்தியடைந்த காளியப்பன், மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதி-மன்றம்-1ல், வழக்கு தொடர்ந்தார். 2024 மே, 20ல் வழக்கு விசார-ணைக்கு வந்தது. அதன் முடிவில் பெருமாளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் பத்மபிரியா உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த பெருமாளை, 15 மாதங்களுக்கு பின், நேற்று காலை அவரது வீட்டில் மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.

