/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில ஓட்டத்துக்கு தகுதி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாநில ஓட்டத்துக்கு தகுதி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 19, 2025 02:38 AM
தாரமங்கலம்: சேலம் மாவட்ட அளவில், பாரதியார், குடியரசு தின விழா போட்டி, கடந்த, 13, 14ல், கருப்பூரில் உள்ள பெரியார் பல்க-லையில் நடந்தது.
அதில் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளி, 10ம் வகுப்பு மாணவி சந்தியா, 1,500 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்தார். அதே பள்ளியில், 9ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ, 600 மீ., ஓட்டத்தில் முதலிடம், 9ம் வகுப்பு மாணவர் கோகுல் கிருஷ்ணன், 600 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்-தனர். இதன்மூலம் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்-களை தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பயிற்சியாளர் அருள்ராஜ், நேற்று முன்தினம் பள்ளியில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.