/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டர் மீது வேன் மோதி பூசாரி பலி
/
டிராக்டர் மீது வேன் மோதி பூசாரி பலி
ADDED : அக் 30, 2025 02:32 AM
மேட்டூர்,  கொளத்துார், அய்யம்புதுார், கோட்டமடுவை சேர்ந்த, மாரியம்மன் கோவில் பூசாரி அய்யந்துரை, 65. விவசாய வேலையும் செய்து வந்தார். இவருக்கு மனைவி யசோதா, 60, இரு மகன்கள் உள்ளனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோட்டமடுவில் இருந்து விவசாய வேலைக்கு அய்யந்துரை புறப்பட்டார். அவரும், சந்திரியூரை சேர்ந்த முனுசாமியும், டிராக்டரில் இன்ஜின் கேபினில் அமர்ந்து, கொளத்துார் - மைசூரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். டிரைவர் சேகர் ஓட்டினார்.
கருங்கல்லுாரில் சென்றபோது, பாலவாடியில் இருந்து கொளத்துார் நோக்கி கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்த கேபின் கம்பியில் தலை மோதி நசுங்கியதால் அய்யந்துரை பலியானார். முனுசாமி, சேகர் காயம் அடைந்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

