/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
/
போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 14, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: போக்சோ வழக்கில் கைதான, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம், ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி, 50; சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். சில்மிஷம் செய்ததாக சில மாணவியர் 'சைல்ட் ஹெல்ப் லைன்' எண்ணில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் விசாரணை நடத்திய பின், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த, 10ல், சுப்ரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்-நிலையில் அவரை சஸ்பெண்ட்
செய்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.