/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதையில்' ஓட்டிய டிரைவர் தனியார் பஸ் பறிமுதல்
/
'போதையில்' ஓட்டிய டிரைவர் தனியார் பஸ் பறிமுதல்
ADDED : ஜூலை 25, 2025 01:33 AM
சேலம்,சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்துதுறை அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள், காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்துாரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், காரிப்பட்டி பஸ் ஸ்டாப் செல்லாமல், பைபாஸ் வழியே செல்ல முயன்றது. அலுவலர்கள், பஸ்சை மறித்தபோது நிறுத்தாமல் வேகமாக சென்றதால் விரட்டி சென்று சிறிது துாரத்தில் மடக்கினர்.
விசாரணையில் ஆத்துார், கல்லாநத்தத்தை சேர்ந்த பிரகாஷ், 31, ஓட்டியதும், அவர் மது அருந்தியிருந்ததும் தெரிந்தது. அவரது பாக்கெட்டுகளில் புகையிலை பொருட்களும் இருந்தன. இதனால் நெடுஞ்சாலைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பயணியரை வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு, பிரகாஷ் ஓட்டி வந்த பஸ்சை, பறிமுதல் செய்தனர்.
மேலும் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், டிரைவர் போதையில் இருப்பதை கவனிக்காமல் இருந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.