ADDED : நவ 21, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்; தலைவாசல், மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் வழியே, அரசு, தனியார் டவுன், மப்சல் பஸ்கள் நின்று செல்ல, போக்கு வரத்து துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் நேற்று, ஆத்துாரில் இருந்து, கள்ளக்குறிச்சி நோக்கிச்சென்ற தனியார் பஸ், மணிவிழுந்தான் சர்வீஸ் சாலைக்கு பதில், மேம்பாலம் வழியே செல்ல முயன்றது. இதனால் அந்த பஸ்சை, மக்கள் சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். சர்வீஸ் சாலை வழியே, இயக்குவதாக பஸ் டிரைவர் கூறியதால், மக்கள், பஸ்சை விடுவித்தனர்.
