தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வி.சி.க.,வை சேர்ந்தவரால் பிரச்னை: லாரி ஓனர்கள் புகார்

வி.சி.க.,வை சேர்ந்தவரால் பிரச்னை: லாரி ஓனர்கள் புகார்

வி.சி.க.,வை சேர்ந்தவரால் பிரச்னை: லாரி ஓனர்கள் புகார்


ADDED : நவ 07, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், ஜங்ஷன் கூட்ஸ்ெஷட் லாரி உரிமையாளர் சங்க ஆலோசகர் செல்வம், செயலர் செல்வ ராஜ் தலைமையில் லாரி உரிமையாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியை முற்றுகையிட்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுத்து பேச்சு நடத்தினர். தொடர்ந்து, 5 பேரை மட்டும் அனுமதித்தனர்.

பின் அவர்கள் அளித்த மனு:எங்கள் சங்கத்தில், 50 லாரி உரிமையாளர்கள் உள்ளனர். பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருந்து, 'லோடு'களை ஏற்றி இறக்கி வருகிறோம். ஆனால், வி.சி.க.,வை சேர்ந்த ஒருவர், சங்கத்தில் பிரச்னையை ஏற்படுத்துவதோடு, ஜாதி மோதலை துாண்டும்படி செயல்படுகிறார்.

இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் புகார் வழங்கி உள்ளோம். கடந்த மாதம், சாலை மறியலில்

ஈடுபட்டோம்.

அந்த நபரால் எங்களால் தொழில் செய்ய முடிய வில்லை. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

அதேபோல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us