/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
' ஏகலைவா பள்ளியை இடமாற்றும் விவகாரம் மீண்டும் ஏற்காட்டில் செயல்பட வாக்குறுதி

ADDED : ஜூன் 27, 2025 01:48 AM
ஏற்காடு, ஏற்காட்டில் அரசு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி செயல்படுகிறது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், தற்காலிகமாக சேலம் அருகே, காரிப்பட்டிக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படு
கிறது. இதற்கு ஏற்காடு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்காட்டிலேயே பள்ளியை நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரை வரவழைத்து நேற்று கூட்டம் நடத்தினர். சிலர், இடமாற்றலாம் என்றும், சிலர், மாற்றக்கூடாது என்றும் தெரிவிக்க, வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பழங்குடியின நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், ஏற்காடு தாசில்தார் செல்வராஜ், 'புலியூரில் பள்ளி கட்டுமான பணி நடக்கிறது. பணி முடிந்ததும், அங்கு பள்ளி செயல்படும்' என உறுதி அளித்தனர். உடனே அதை எழுத்துப்பூர்வமாக எழுதி, சுகந்தி பரிமளம் கையெழுத்திட்டு, மக்களிடம் கொடுத்தார்.
ஆனாலும் சில பெற்றோர், 'பள்ளியில் அடிப்படை வசதி இல்லை. பிள்ளைகளை அழைத்துச்செல்கிறோம். இடமாற்றியபின், பிள்ளைகளை கொண்டு வந்து விடுகிறோம்' என கூறி, பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்றனர்.