ADDED : ஜூலை 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வைரமணி தலைமை வகித்தார். அதில் மாதர் சங்கத்தை இழிவுபடுத்தி பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் சீமானை கண்டித்து, அவரது படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநில குழு உறுப்பினர் ஞானசவுந்தரி, மாவட்ட செயலர் தேவி, பொருளாளர் பெருமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.