/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
ADDED : ஆக 23, 2025 02:05 AM
சேலம் :சேலம் மாவட்டம் இடங்கணசாலையை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, 5 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். இதனால் போலீசார், மக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அனைவரும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்திய பின், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இடங்கணசாலையில் எங்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ஜிதம் செய்த நிலத்துக்கு, நீதிமன்றத்தில் டிபாசிட் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதி திராவிட நலத்துறை, 30 குடும்பங்கள் வசிக்க, 30 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மீதி இடத்தில் குடிசை அமைக்க முயன்ற போது, போலீசார் தடுத்தனர். இதுகுறித்து, 70க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.