கோவில் பங்காளிகள் எதிர்ப்பு சாலை பணி பாதியில் நிறுத்தம்
கோவில் பங்காளிகள் எதிர்ப்பு சாலை பணி பாதியில் நிறுத்தம்
ADDED : செப் 29, 2026 06:12 AM
இடைப்பாடி; இடைப்பாடி, சித்துார் வெடிகாரம்பாளையம் ஐய-னாரப்பன் கோவிலை, 100க்கும் மேற்பட்டோர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அக்-கோவிலை ஒட்டி வசிப்பவர்கள், கோவில் வழியே புறம்போக்கு இடம் உள்ளதால் சாலை வசதி கேட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தாசில்தார் நாகூர்மீராசா, பூலாம்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர், நேற்று மாலை அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் சாலை பணியை தொடங்கினர். பாதி துாரம் சாலை அமைத்த நிலையில், கோவில் இடம் வழியே சாலை போட
முயன்றனர்.
அப்போது, கோவில் பங்காளிகள் எதிர்ப்பு தெரி-வித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்-டது. தொடர்ந்து நடத்திய பேச்சில், கோவில் பங்-காளிகளும், புகார் அளித்துள்ள மணி என்பவரது தரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், உங்கள் பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்-கொள்ளுங்கள்' எனக்கூறி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுவிட்டனர்.
