/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
/
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:45 AM
சேலம், தமிழ்நாடு - புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். வக்கீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து விவேகானந்தன் கூறுகையில், ''சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை காமராஜ், சோழிங்கநல்லுார் சக்கரவர்த்தி ஆகிய வக்கீல்கள் கொலை செய்யப்பட்டனர். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
மாவட்ட செயலர் நரேஷ்பாபு, துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், ராஜேஷ், துணை செயலர் அய்யனார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கம் சார்பில், நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் இமயவர்மன் தலைமையில் செயலர் முருகன், பொருளாளர் கண்ணன் உள்பட திரளானோர், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மேலும் வாழப்பாடி வக்கீல் சங்கம் சார்பில், அங்குள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் வீரமுத்து, செயலர் சண்முகநாதன், பொருளாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.