ADDED : ஜன 06, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை ரோட்டரி சங்கம் சார்பில் கலை, இலக்கிய விழா போட்டி, சதுரங்காடி பொது ஜன சேவா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
அதில் மேட்டூர், கொளத்துார், மேச்சேரி பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 180 பேர் பங்கேற்றனர். கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி - வினா போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இதன் ஏற்-பாடுகளை சங்க தலைவர் அன்பழகன், செயலர் செல்வி, பொரு-ளாளர் ஜாக்குலின் செய்தனர். கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்-பெக்டர் தங்கவேலு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

