/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
51 குடும்ப தலைவிகளுக்கு காஸ் அடுப்பு வழங்கல்
/
51 குடும்ப தலைவிகளுக்கு காஸ் அடுப்பு வழங்கல்
ADDED : மார் 17, 2024 02:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: பா.ஜ., சார்பில் மேட்டூரில், சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அலுவலகம் நேற்று காலை திறக்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், நகர தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதில், பிரதமர் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில், 51 குடும்ப தலைவிகளுக்கு இலவச காஸ் அடுப்பு, சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

