/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஸ்வின்ஸில் கொழுக்கட்டை விற்பனை தொடக்கம்
/
அஸ்வின்ஸில் கொழுக்கட்டை விற்பனை தொடக்கம்
ADDED : செப் 06, 2024 07:43 AM
பெரம்பலுார்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலுார் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்ட் ஸ்னாக்ஸ் பேக்கரியில் கொழுக்கட்டை சிறப்பு விற்பனை தொடங்கியது.
இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் கூறியதாவது: பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்ட அஸ்வின்ஸ் பேக்கரி மற்றும் வெஜ் ரெஸ்டாரன்ட், சென்னை, திருச்சி, சேலம், ஆத்துார், துறையூர், பெரம்பலுார், அரியலுார், திண்டிவனம், உளுந்துார்பேட்டை, விழுப்புரம், முசிறி, கிருஷ்ணகிரி, லால்குடி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில், 39 கிளைகளுடன் இயங்கி வருகின்றன. அனைத்து கிளைகளிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை விற்பனை தொடங்கியுள்ளது. தேங்காய் பூரணம், எள்ளு பூரணம், அம்மனி, மோதகம், காரம், பால் ஆகிய, 6 வகை கொழுக்கட்டைகள், அரை கிலோ, ஒரு கிலோவில் விற்கப்படுகின்றன. அஸ்வின்ஸ் ஸ்பெஷல் கொழுக்கட்டையுடன், சதுர்த்தி பூஜையை பக்தர்கள் வீடுகளில் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.