/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜன.,5 வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
ஜன.,5 வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜன 01, 2025 06:17 AM
வீரபாண்டி: சேலம் மாவட்டத்தில் கடந்த டிச., 16 துவங்கி ஜன., 5 வரை, 20 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
வீரபாண்டி ஒன்றியத்தில் நேற்று எட்டிமாணிக்கம்பட்டி, இளம்பிள்ளை, கீரனுார் பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இன்று கல்பாரப்பட்டி, கொம்பாடிப்பட்டி, ராஜாபாளையம், பெத்தாம்பட்டி, கரிக்கட்டாம்பாளையம். நாளை (ஜன., 2) ராக்கிப்பட்டி, நைனாம்பட்டி, சென்னகிரி, ஜன.,3ல், சென்னகிரி, ஆணைகுட்டப்பட்டி, 4ல், சேனைப்பாளையம், எஸ்.பாப்பாரப்பட்டி, முத்தனம்பாளையம், 5ல், முத்தனம்பாளையம், மருளையம்பாளையம், ஆட்டையாம்பட்டி, வேம்படிதாளம் ஆகிய இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத மாட்டின உரிமையாளர்கள், இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கால்நடைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

