/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்ராகு-கேது பெயர்ச்சி விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்ராகு-கேது பெயர்ச்சி விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்ராகு-கேது பெயர்ச்சி விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்ராகு-கேது பெயர்ச்சி விழா
ADDED : ஏப் 26, 2025 01:19 AM
கரூர்:கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று லட்சார்ச்சனை நடந்தது.நவக்கிரகங்களில் ராகு-கேது ஆகிய கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, இடப் பெயர்ச்சியாவது வழக்கம். நடப்பாண்டு இன்று ராகு மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர். அதையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம், விநாயகர் வழிபாடுடன் லட்ச்சார்ச்சனை தொடங்கியது.
நேற்று இரண்டாவது நாளாக, நவக்கிரக அபிேஷகம், லட்சார்ச்சனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
இன்று காலை, 8:00 மணிக்கு ராகு-கேதுவுக்கு மூலமந்திரம், யாகம், அஸ்திர ேஹாமம், சிறப்பு அபிேஷகம், கலசாபி ேஷகம், மாலை, 4:20 மணிக்கு மஹா தீபாராதனை காட்டப்படுகிறது.