/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே கேட் உடைந்து உயர் அழுத்த கம்பி சேதம்
/
ரயில்வே கேட் உடைந்து உயர் அழுத்த கம்பி சேதம்
ADDED : மே 06, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கேட்டில், நேற்று மாலை, 5:00 மணிக்கு பலத்த காற்று வீசியது. அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் வளைந்து, உயர் அழுத்த மின்கம்பியில் மோதி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல்படி வாழப்பாடி போலீசார் சென்று, வாகனங்களை சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பிவிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்தனர்.
பின் உயர் அழுத்த மின்கம்பியில் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே ரயில்வே அதிகாரிகள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்டோர், பழுதுபார்க்க பயன்படுத்தம் பிரத்யேக ரயிலில் நின்று, சேதமடைந்த கம்பியை சீரமைத்தனர். தொடர்ந்து ரயில்வே கேட் சீரமைக்கும் பணி நடந்தது.