/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடுகள் தோறும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
/
வீடுகள் தோறும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
ADDED : ஜூலை 13, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 34வது வார்டு, புதுத்தெருவில், 'நகர்புற மக்கள் துாய்மை' மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீடுகள் தோறும் மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து, அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் அம்சங்களை கருத்தில் கொண்டு, மாநகராட்சி மூலம் வீடுகள் தோறும் சென்று, குப்பையை பிரித்து சேகரிக்கும் பணிக்கு, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

