/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
/
வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஜூலை 13, 2025 01:57 AM
குளித்தலை :குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும், இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது.
அதன்படி, நேற்று நடந்த முகாமிற்கு, டி.எஸ்.ஓ., வைரப்பெரு மாள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து ரேஷன் அட்டடை தொடர்பாக கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆர்.ஐ., யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான் மற்றும் வருவாய் துறையினர், அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் சேர்ப்பு, முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.
* புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அதில், புகழூர் தாலுகாவுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த, ரேஷன் கார்டுதாரர்கள் புதிய ரேஷன் கார்டு கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட, பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் பாலசந்திரனிடம் வழங்கினர்.
பொது விநியோக திட்ட முதுநிலை ஆய்வாளர் சத்யா, தனி வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட, அதிகாரிகள் உடனி ருந்தனர்.

