/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் விற்பனையாளர் பணி நேர்முகத்தேர்வு தொடக்கம்
/
ரேஷன் விற்பனையாளர் பணி நேர்முகத்தேர்வு தொடக்கம்
ADDED : நவ 29, 2024 01:32 AM
ரேஷன் விற்பனையாளர் பணி
நேர்முகத்தேர்வு தொடக்கம்
சேலம், நவ. 29-
சேலம், அழகாபுரத்தில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு, பொது வினியோக திட்ட துணை பதிவாளர்
பிரபாகர் தலைமையில் நேற்று தொடங்கியது.இதுகுறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், பல்வேறு வகை சங்கங்களில், 152 விற்பனையாளர், 10 கட்டுனர் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதியானவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விற்பனையாளர் பணிக்கு, 13,708 விண்ணப்பங்கள், கட்டுனர் பணிக்கு, 2,021 விண்ணப்பங்கள் என, 15,729 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பதாரர்களில், விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு தொடங்கி, டிச., 7 வரை நடக்கிறது. கட்டுனர் பணி நேர்முகத்தேர்வு, டிச., 7 முதல், 9 வரை நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.