/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு
/
நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு
நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு
நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு
ADDED : நவ 16, 2025 01:54 AM
ஆத்துார்:ஆத்துார், விநாயகபுரம் பஸ் ஸ்டாப் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் உள்ளன. அதில் நீதிபதி குடியிருப்பு வளாக பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, பாம்பு இருந்தது. இதுகுறித்து அளித்த தகவல்படி, அங்கு வந்த, ஆத்துார்
தீயணைப்பு நிலைய வீரர்கள், 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நல்ல பாம்பு
பெத்தநாயக்கன்பாளையம், சத்தியாபுரம் அருகே ஆரியூர் தெருவை சேர்ந்த ஹேமந்த், 30, வீடு அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு பாம்பு இருந்தது. இதுகுறித்த தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்று, கருவி மூலம், 6 அடி நீளமுள்ள, நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச்சென்றனர்.