/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விழுப்புரத்துக்கு நிவாரண பொருள்; சேலம் கலெக்டர் அனுப்பிவைப்பு
/
விழுப்புரத்துக்கு நிவாரண பொருள்; சேலம் கலெக்டர் அனுப்பிவைப்பு
விழுப்புரத்துக்கு நிவாரண பொருள்; சேலம் கலெக்டர் அனுப்பிவைப்பு
விழுப்புரத்துக்கு நிவாரண பொருள்; சேலம் கலெக்டர் அனுப்பிவைப்பு
ADDED : டிச 04, 2024 07:01 AM
சேலம்: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் பிருந்தாதேவி நேற்று அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்கட்டமாக, 10,000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 5,000 குடிநீர் பாட்டில்கள், பாய், போர்வை, ஜூஸ் பாக்கெட், பேரீச்சை, பால் பவுடர் தலா, 1,000 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், 5 வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பொருட்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி கலெக்டர் ஆக்ரிதி சேத்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.