/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
ADDED : அக் 24, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பச்சப்பட்டி, அசோக் நகரில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனால் பிரச்னைகளை தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள், குடியிருப்பு பகுதியிலிருந்து செல்லும் தடத்தை மறித்து, சுற்றுச்சுவர் எழுப்பி சிறு விநாயகர் கோவில்களை அமைத்தனர்.
இந்நிலையில் வக்பு வாரியம் சார்பில், வழித்தடம் ஏற்படுத்தித்தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காலை மாநகராட்சி அலுவலர்கள், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம், சிறு கோவில்கள், சுற்றுச்சுவரை இடித்து தடம் ஏற்படுத்தினர்.

