/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாடிய மலர்கள் அகற்றம்: உருவங்கள் புதுப்பொலிவு
/
வாடிய மலர்கள் அகற்றம்: உருவங்கள் புதுப்பொலிவு
ADDED : மே 29, 2024 07:49 AM
ஏற்காடு : ஏற்காட்டில், 47வது கோடை விழா, மலர் கண்காட்சி கடந்த, 22ல் தொடங்கியது.
26ல் கோடை விழா நிறைவு பெற்றது. மலர் கண்காட்சி மட்டும், மே, 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில், அண்ணா பூங்காவில் லட்சக்கணக்கான பூக்களால் அமைக்கப்பட்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடற்குதிரை, கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மவுஸ் ஆகியவை அமைக்கப்பட்டு, ஒரு வாரமானதால், மலர்கள் வாடிப்போய் காணப்பட்டன. இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஆக்டோபஸ், டாம் அண்ட் ஜெரி, கடற்குதிரை, டொனால்டு டக், மிக்கி மவுஸ் உள்ளிட்ட அனைத்து உருவங்களிலும், வாடிப்போய் இருந்த பூக்கள் அகற்றப்பட்டு, புது பூக்களை வைத்து, தோட்டக்கலை துறையினர் அலங்கரித்தனர். இதனால் புது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்கள், நேற்று சுற்றுலா பயணியரை ரசிக்க வைத்தது.