ADDED : நவ 20, 2026 01:12 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீர் வெளியேற்றும், 16 கண் மதகுகளை பலப்படுத்தி சீரமைக்கும் பணி, நீர்வளத்துறை சார்பில், 19.55 கோடி ரூபாய் செலவில், 2025 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
தற்போது இறுதிகட்டமாக, 15, 16வது மதகுகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியை நீர்வளத்துறை தர கட்டுப்பாடு தலைமை பொறியாளர் ராஜா நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ராஜா கூறுகையில், ''அணை, 16 கண் மதகு சீரமைப்பு பணி, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, 93 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மீதி பணி, டிச., 2க்குள் முடியும்,'' என்றார்.
அணை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேற்பார்வை பொறியாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினர் உடனிருந்தனர்.
