/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி நீட்டிப்பு ஆணையை முறைப்படுத்த கோரிக்கை
/
பணி நீட்டிப்பு ஆணையை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 06, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார்.
அதில் காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல்; கல்லுாரி விடுதிகளுக்கு முதுநிலை பட்டதாரி காப்பாளர் எனும் புது பணியிடத்தை உருவாக்குதல்; பணி நீட்டிப்பு ஆணையை முறைப்படுத்தல்; காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலர் மணிமொழி, பொருளாளர் நாராயணசாமி, அமைப்பு செயலர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.