/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாய்சேய் நல விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
/
தாய்சேய் நல விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
தாய்சேய் நல விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
தாய்சேய் நல விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : ஜன 20, 2024 07:54 AM
வீரபாண்டி : தாய்சேய் நல விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
சேலம், சிவதாரபுரம் பச்சைப்பட்டினி மாரியம்மன் கோவில் அருகே, 1983ல் கிராம தன்னிறைவு திட்டத்தில் தாய்சேய் நல விடுதி கட்டடம் திறக்கப்பட்டது. அந்த விடுதியை சுற்றுவட்டார குடும்பத்தினர், தடுப்பூசி முதல் பிரசவம் வரை அனைத்து அவசர மருத்துவ உதவிகளுக்கு பயன்படுத்தினர்.
அதன் அருகே புதிதாக சார் - பதிவாளர் அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பக்கத்தில் நுாலகம், ரேஷன் கடை என வரிசையாக கட்டப்பட்டன.
இந்நிலையில் சாக்கடை கால்வாய் கட்ட, தாய்சேய் நல விடுதி கட்டடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டதால், கர்ப்பிணியர், தாய்மார்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தாய்சேய் நல விடுதி, அருகே உள்ள அரசு பள்ளியில், வாரம் இரு நாட்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது. ஆனால் சாக்கடை கால்வாய் பணி முடிந்து, 5 ஆண்டுகளாகியும், தாய்சேய் நல விடுதி பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி, விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், விடுதி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.