/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கை ஆய்வு முறைகளை மாற்ற கோரிக்கை
/
கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கை ஆய்வு முறைகளை மாற்ற கோரிக்கை
கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கை ஆய்வு முறைகளை மாற்ற கோரிக்கை
கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கை ஆய்வு முறைகளை மாற்ற கோரிக்கை
ADDED : நவ 27, 2024 01:33 AM
சேலம், நவ. 27--
தமிழ்நாடு மகப்பேறு மருத்துவ சங்க கூட்டமைப்பு, சேலம் மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கையின் ஆய்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தணிக்கையின்போது மகப்பேறு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது. பிரசவத்தின்போது தவிர்க்க முடியாத சூழலில் மகப்பேறு வல்லுனர்களால் முதல்கட்ட ஆய்வும், தணிக்கை குறித்த அறிக்கையை அனுப்பும்போது, துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துகளை அவசியம் பெற வேண்டும். ஆய்வு, தணிக்கை குழுவில் அந்தந்த பகுதிகளில், மகப்பேறு சங்க தலைவர் அல்லது செயலர், மற்றும் மூத்த மருத்துவ உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் தமிழ்நாடு மகப்பேறு மருத்துவ சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் வித்யா பிரபாகர், இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தேசிய முன்னாள் துணை தலைவர் பிரகாசம், சேலம் மாவட்ட மகப்பேறு சங்க நிர்வாகிகள் ஜெயமாலா, சண்முகவடிவு உள்ளிட்டோர் இருந்தனர்.