ADDED : ஆக 09, 2026 04:48 AM
மேட்டூர்:மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணிக்கு, சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு அரை நாள்
முழுமையாக ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கொளத்துார் வட்டார கிளை செயலர் செல்வராஜ் அறிக்கை:
சேலம்
மாவட்டத்தில் ஆரம்ப, நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, 5,500 ஆசிரியர்கள்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 1ல்
தொடங்கிய பணி வரும், 31 வரை நடக்கிறது. காலை, 9:30 முதல், 11:00 மணி
வரை ஒரு குழுவும், மதியம், 3:30 முதல், 5:00 மணி வரை ஒரு குழுவும்,
கணக்கெடுக்க வேண்டும். பணி முடிந்த பின், மீண்டும் பள்ளி சென்று பாடம்
நடத்த வேண்டும்.
கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளும் நீண்ட
இடைவெளியில் உள்ளதால் கணக்கெடுப்பதில் சிரமம் உள்ளது. அதனால்
காலையில் ஒரு குழு, மதியம் ஒரு குழு, வகுப்புக்கு செல்லாமல்
கணக்கெடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
