/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க கோரிக்கை
/
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க கோரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க கோரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க கோரிக்கை
ADDED : டிச 18, 2024 07:13 AM
ஆத்துார்: பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, ஏக்கருக்கு, 25,000 ரூபாய் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா கூறியதாவது: பெஞ்சல் புயலின்போது ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி தாலுகாவில், தினமும், 50 முதல், 90 மி.மீ., மழை பெய்தது. இதில், மரவள்ளி, மக்காச்சோளம், நிலக்கடலை, மஞ்சள், பருத்தி, காய்கறி பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை நிலையில் உள்ள மரவள்ளி, மக்காச்சோளம், மஞ்சள் பாதிப்பு அதிகம். சேலம் மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள், 15 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கள ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இரு முறை பெய்த மழையில் முழு பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, ஏக்கருக்கு, 25,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் வசிஷ்ட நதி மற்றும் சுவேத நதி, ஏரி பாசன விவசாயிகள் கூறுகையில், 'ஆறு, ஏரி பாசன பகுதிகளில் உள்ள மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அனைத்து வகை பயிர்கள், கிணறு சுற்றுச்சுவர் சேதம், குடியிருப்புகள் சேதம் போன்றவைகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.