/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராமதாஸ் அணி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
/
ராமதாஸ் அணி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ராமதாஸ் அணி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ராமதாஸ் அணி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ADDED : நவ 27, 2025 02:21 AM
சேலம், பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், தென்மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் நேற்று, சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது:
ரவுடித்தன போக்கு, அநாகரிக அரசியல், அத்துமீறல், கட்சி வேலை செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அன்புமணி கோஷ்டியினர் செய்து வருகின்றனர். அன்புமணியை மேடையில் வைத்துக்கொண்டே, 'ஊருக்குள் நுழைய முடியாது' என மிரட்டுகின்றனர். அவர் கட்டுப்பாட்டில், அவர் ஆதரவாளர்கள் இல்லை. அல்லது அவரே ஊக்குவிக்கிறார் என்றுதான் பொருள்.
தொண்டர்களாக இருந்து, இவ்வளவு பதவி, பொறுப்புகளை வழங்கிய ராமதாஸ் உடன் இருப்பது துரோகமா அல்லது பணம் சம்பாதித்து விட்டு, தற்போது வெளியே சென்று, ராமதாஸை தாக்க முயற்சிப்பது துரோகமா? தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எஸ்.பி.,யிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்து பெயிலில் வந்தவர்கள், கிழக்கு மாவட்ட செயலர் நடராஜனுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

