/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிதிலமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
/
சிதிலமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்-காரவள்ளி பிரதான சாலையில், வெண்டாங்கி பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் தார்ச்சாலையை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, வாழவந்திகோம்பை ஊராட்சி, வெண்டாங்கியில் இருந்து வாழவந்திகோம்பை மற்றும் பள்ளம் பாறைக்கு செல்லும் வழியில் உள்ள தார்ச்சாலையானது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துடன் கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.